காலைத் தியானம் – மார்ச் 28, 2022

மத் 27: 54 – 61

மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்

                             நூற்றுக்கு அதிபதியும் அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தவர்களும் யூதர்கள் அல்ல. ஆனால் அவர்கள் இயேசுவைக் குறித்து ஒரு சத்தியத்தை அறிக்கையிடுகிறார்கள். இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.  சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து இந்த உண்மை வெளிப்படுகிறது. அவர்களுடைய கூற்றில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவர் தேவனுடைய குமாரனாக இருக்கக்கூடும் என்று சொல்லவில்லை. மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். ஆனால் பிரதான ஆசாரியரும், பரிசேயரும் (திருச்சபையில் பெரியவர்கள்!) அவரை எத்தன், ஏமாற்றுக்காரன் என்றார்கள்.  அவர்களுடைய மனது அடைப்பட்ட மனதாய் (closed mind) இருந்தது. அடைப்பட்ட மனதிற்குள் சத்தியம் பிரவேசிக்க முடியாது. உலக ஆசைகள், சிற்றின்பம் போன்ற கதவுகளைப் போட்டு உன் மனதை அடைத்து விட்டால் இயேசு பிரவேசிக்க முடியாது. (வெளி 3:20).

ஜெபம்:

ஆண்டவரே, என் இதயக் கதவை எப்பொழுதும் உமக்குத் திறந்து வைத்திருக்கிறேன். உள்ளே பிரவேசித்து என்னுடனே தங்கியிரும். ஆமென்.