காலைத் தியானம் – மார்ச் 30, 2022

மத் 28: 1 – 10

சீக்கிரமாய் போய் . . .  சொல்லுங்கள்

                             கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்பது இன்றைய நாட்களில் நம் நாட்டில் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று. இயேசுகிறிஸ்து மதமாற்றத்தை விரும்புகிறவர் அல்ல. அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் மனமாற்றத்தை விரும்புகிறவர். மதமாற்றமோ அல்லது மனமாற்றமோ மனிதர் யாராலும் செய்ய முடியாது.  மனமாற்றத்தை இயேசு ஒருவரே கொடுக்க முடியும். கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை தேவ தூதனிடமிருந்து கேட்டபோதும், இயேசுவை நேரில் சந்தித்தபோதும் சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை, சீக்கிரமாய் போய் சொல்லுங்கள் என்பதே. சீக்கிரமாய் அறிவிக்கப்பட வேண்டும். அதுதான் நம்முடைய வேலை. விதையை விதைப்பதுதான் நம்முடைய வேலை.  உயிர்த்தெழுந்த இயேசுவோடு நெருங்கி வாழும் வாழ்க்கை தரும் மகிழ்ச்சியையும், நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டவுடன் கிடைக்கும் ஆனந்தத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?

ஜெபம்:

ஆண்டவரே, இரட்சிப்பின் நற்செய்தியை என் நண்பர்களிடமும் என்னுடன் வேலை செய்பவர்களிடமும் பகிர்ந்து கொள்ள உதவி செய்யும். ஆமென்.