மாற்கு 1: 1 – 13
அவர் பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்
யோவான்ஸ்நானன் கொடுத்தது ”பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்” என்று 4ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், நாம் தண்ணீரில் எடுத்துக்கொள்ளும் ஞானஸ்நானம் மனந்திரும்புதலுக்கும் பாவமன்னிப்புக்கும் அடையாளமாக இருக்க வேண்டும். நான் என் பழைய மனிதனைக் களைந்துவிட்டு புதிய மனிதனாக உருவெடுத்துவிட்டேன் என்பதற்கு அடையாளமே தண்ணீரில் எடுத்துக் கொள்ளும் ஞானஸ்நானத்திற்கு அர்த்தம். கத்தோலிக்க திருச்சபையிலும், CSI, CNI போன்ற திருச்சபைகளிலும் பழக்கமாக இருந்துவரும் குழந்தை ஞானஸ்நானத்திற்கு வேதாகம ஆதாரம் எதுவும் இல்லை. அது மாத்திரமல்ல, தண்ணீரில் முக்கி எடுக்கும் ஞானஸ்நானத்தைவிட முக்கியமான ஞானஸ்நானமே இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கொடுக்கும் ஞானஸ்நானம் என்று யோவான் நமக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியில் நம்மை முக்கி எடுக்கிறார். Jesus Christ drenches us in the Holy Spirit. இதற்குக் குறைவான எதையும் போதும் என்று நினைத்துவிடாதே.
ஜெபம்:
ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை எனக்கும் தாரும். ஆமென்.