மாற்கு 1: 23 – 34
இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது?
மந்திரம் சொல்லி பிசாசுகளை விரட்டுவது தான் பழைய வழியாக இருந்து வந்தது. மந்திரத்தில் ஏதாவது பிசகு ஏற்பட்டுவிட்டால் அல்லது மந்திர வார்த்தைகளில் ஒரு வார்த்தை பிசகிவிட்டால், பிசாசு போகாது! இப்படிப்பட்டது தான் அவர்களது நம்பிக்கை (பழைய உபதேசம்). இயேசு மந்திரம் ஒன்றும் சொல்லவில்லை. “போ” என்று அதட்டியவுடன் பிசாசு போய்விட்டது. இயேசுவின் மகத்துவமும் வல்லமையும் அவருடைய சொல்லிலும் செயலிலும் தெரிகின்றன. பேதுருவின் மாமியைக் கையைப் பிடித்து தூக்கிவிட்டார். காய்ச்சல் பறந்து போய்விட்டது. இப்படிப்பட்ட வல்லமைக்கு உதாரணங்கள் இன்றும் ஏராளமாக உண்டு. குறிப்பாக நற்செய்தியை முதல்முறையாகக் கேட்டு இரட்சிக்கப்பட்டுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் இயேசுகிறிஸ்துவின் வல்லமையை அதிகமாக அனுபவிக்கிறார்கள். இதற்கு அவர்களுடைய விசுவாசமே காரணம். உன்னுடைய விசுவாசத்தின் படியே உன் வாழ்க்கையிலும் இயேசுவின் வல்லமை வெளிப்படும்.
ஜெபம்:
ஆண்டவரே, நீர் எங்கள் சரீர குறைபாடுகள் அனைத்தையும் சுகமாக்க வல்லவர் என்பதை விசுவாசிக்கிறேன். என் குடும்பத்தின் தேவைகள் உமக்குத் தெரியும். ஒரு வார்த்தை மட்டும் சொல்லி உம்முடைய வல்லமையைக் காணச்செய்யும். ஆமென்.