மாற்கு 1: 35 – 45
வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்
வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார் என்பது, இயேசு தனித்திருந்தார் என்பதைக் குறிக்கின்றது. வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார் என்பது இன்று வாசித்த பதினோரு வசனங்களில் இரண்டு முறை சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்தும வளர்ச்சிக்குத் தனித்திருப்பது மிகவும் அவசியம். “தங்கியிருந்தார்” என்ற வார்த்தை, இயேசு அதிகமான நேரத்தைப் பிதாவாகிய தேவனோடு தனித்திருப்பதில் செலவழித்தார் என்பதைக் காட்டுகிறது. உன் ஆண்டவரோடு பேசுவதற்குத் தனித்திருப்பது அவசியம். T.V.யின் சத்தமும், வாகனங்களின் இரைச்சலும், மக்களின் சலசலப்பும் இருக்குமிடத்தில் தனித்திருப்பது இயலாத காரியம். வெளிப்புற அமைதியிலிருந்து உள் அமைதிக்குச் செல்பவன் பாக்கியவான். இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக. Be still and know that I am God.
ஜெபம்:
ஆண்டவரே, தனித்திருந்து உம்முடன் உறவாடும் பாக்கியத்தை அனுதினமும் எனக்குத் தாரும். ஆமென்.