காலைத் தியானம் – ஏப்ரல் 08, 2022

மாற்கு 3: 1 – 12

அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு 

                             இயேசுவுக்கு விசனத்தையும் கோபத்தையும் உண்டாக்கின ஒரு காரியத்தைப் பற்றி இங்கு வாசிக்கிறோம். வியாதியில் அவதிப்படும் ஒருவன் விடுதலை கிடைக்காதா என்று ஏங்குகிறான். அவனைச் சுற்றியுள்ளவர்கள் ஓய்வுநாளில் இயேசு அவனை சுகமாக்கிவிட்டால் சம்பிரதாயம் (tradition) கெட்டுப்போகும் என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். மனிதன் உண்டாக்கிக் கொண்ட சம்பிரதாயம் பெரியதா அல்லது கருணை பெரியதா? இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு காரியம் என்னவென்றால், இயேசுவின் மேல் குற்றஞ்சாட்ட மனதாயிருந்தவர்கள் அனைவரும் ஜெப ஆலயத்தில் இருந்தவர்கள்! இன்றும் நம் ஆலயங்களில் சம்பிரதாயங்களையும் சடங்காச்சாரங்களையும் வைத்து ஏற்படும் சண்டைகளும் வாக்குவாதங்களும் எத்தனை! உள்ளத்தில் அன்பும் கருணையும் இல்லாதவர்கள்தான் சம்பிரதாயங்களைக் கெட்டியாய் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பிரச்சனை என்று நினைப்பது எதுவாயிருந்தாலும் அதை அன்பு, கருணை, இரக்கம் என்ற கண்ணோட்டத்திலேயே  பார்க்கக் கற்று தாரும்.    ஆமென்.