காலைத் தியானம் – ஏப்ரல் 11, 2022

மாற்கு 3: 23- 35

அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும் எனக்குத் தாயுமாயிருக்கிறான் 

                             தேவாதி தேவனோடு மனிதன் உறவு வைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. சர்வவல்லவரோடு, காற்றையும் கடலையும் அதட்டின வல்லவரோடு, தீராத வியாதிகளைத் தீர்க்கும் வல்லவரோடு நீயும் சகோதரன் அல்லது சகோதரி என்ற உறவு வைத்துக்கொள்ளலாம். அந்த உறவு நம்முடைய செயல்களினால் உருவாகுவது இல்லை. நீ உன் ஆண்டவரை நேசித்து அவர் மீது அன்பு செலுத்துவாயானால், உனக்கும் சகோதரன், சகோதரி என்ற உறவு வந்துவிடும். நீ இயேசுவை நேசிக்கிறாயா? இத்தனை வருடப் பழக்கத்தில் உன் ஆண்டவரோடு நீ கொண்டுள்ள உன்னுடைய அன்பு வளர்ந்திருக்கிறதா? உன் அன்பு உண்மையானதாக இருந்தால் நீ நிச்சயமாக தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுவாய். உன் ஆண்டவருடைய வேலையில் நீ எடுத்துக் கொள்ளும் பங்கு என்ன?

ஜெபம்:

ஆண்டவரே, உம்மிடம் முழு மனதுடன் அன்பு செலுத்தும்படி, நான் வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்.