மாற்கு 4: 1 – 12
கண்டும் காணாதவர்களாகவும் கேட்டும் உணராதவர்களாகவும்
புறக்கண் கண்டதை அகக்கண் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். காது கேட்டதை மனம் பதிவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அதற்கு முதலாவதாக வேத வசனத்தின் மீது வாஞ்சை இருக்கவேண்டும். அந்த வாஞ்சை பரிசுத்த வேதாகமத்தை இரவும் பகலும் தியானிக்க நம்மை ஊக்குவிக்க வேண்டும். காலையில் வாசிக்கும் வேத வசனங்களைத் தியானிக்கிறோமா? வேதத்தை வாசிக்க எவ்வளவு நேரம் ஆகிறது? தியானத்திற்கு எவ்வளவு நேரம் ஆகிறது? வாசித்து, கவனித்து, கற்றறிந்து, உட்கொள்வதுதான் சரியான முறை. உட்கொள்ளாவிட்டால் வேதம் வாசிப்பதில் என்ன பயன்?
ஜெபம்:
ஆண்டவரே, உமது வேதத்தைப் பிரியமாய் வாசிக்கவும், வாசித்ததைத் தியானிக்கவும், தியானித்ததை உட்கொள்ளவும் எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்.