காலைத் தியானம் – ஏப்ரல் 13, 2022

மாற்கு 4: 13 – 25

உலகக் கவலைகளும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போட . . .

                             எப்படிப்பட்ட முட்கள் வசனமாகிய விதைகளை வளர விடாமல் தடுக்கின்றன என்பதை கவனியுங்கள். உலகக் கவலைகள், ஐசுவரியத்தின் மயக்கம், மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகள் ஆகியவைகள் உட்பிரவேசித்தால் வசனத்தை நெருக்கிப்போட்டுவிடும் என்பதைப் பார்க்கிறோம் (வசனம் 18). இதில் உலகக் கவலைகள் நம் எல்லாருக்கும் உண்டு. ஆனால் உலகக் கவலைகள் நம் வளர்ச்சியைத் தடுத்து விடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? வேதம் வாசிப்பதற்கும் அதைத் தியானிப்பதற்கும், துதிப்பாடல்கள் பாடுவதற்கும் ஒரு நேரத்தை குறிப்பிட்டு அந்த நேரத்தில் அதை ஒழுங்காகச் செய்யலாம். ஒரு மாதம் அப்படி செய்து பழகி விட்டால் உலகக் கவலைகள் நம் வளர்ச்சியைத் தடுக்காதபடி நாம் வெற்றி பெற்றுவிடுவோம்.

ஜெபம்:

ஆண்டவரே, உலகக் கவலைகளோ, ஐசுவரியமோ அல்லது இச்சைகளோ என் வளர்ச்சியைத் தடுத்து விடாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆமென்.