காலைத் தியானம் – ஏப்ரல் 14, 2022

யோவான் 16: 5 – 16    

நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்

                             நாம் இறந்து இந்த பூமியை விட்டுப் பிரிந்து கர்த்தருடைய பிரசன்னத்திற்குச் செல்லும் நேரம் நம்மில் அநேகருக்குத் தெரிவதில்லை. ஆனால் அதைத் தெரிந்துகொண்டு தம்மையும் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் தயார் படுத்திக் கொள்ளும் பாக்கியம் ஒரு சிலருக்குக் கிடைக்கிறது. இயேசு தம் மரணத்திற்கு முன் தம்முடைய சீடர்களுக்கு ஆறுதலும், அறிவுரையும் கூறி அவர்களைத் தயார் செய்கிறார். தாம் செல்கிற பாதை தவிர்க்க முடியாததென்றும், அவர்களை விட்டுப் பிரிந்து செல்வது தம்முடைய சீடர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும் என்றும் கூறுகிறார்.  ஆம் இயேசு மாசற்ற பலியாக தம்மைச் சிலுவையில் மரிக்க ஒப்புக்கொடுத்ததால்தான் சீடர்களுக்கு மாத்திரமல்லாமல் மனுக்குலம் அனைத்திற்கும் இரட்சிப்பு உண்டாயிருக்கிறது. மேலும் அவர் மரித்து உயிர்தெழுந்ததால்தான் பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் அனுப்பப்பட்டிருக்கிறார்.

ஜெபம்:

ஆண்டவரே, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் எங்களைக் கண்டித்து உணர்த்தும்படி பரிசுத்த ஆவியானவரை எங்கள் மத்தியில் அனுப்பியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.