மாற்கு 4: 26 – 34
அவர்கள் கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக
இயேசு கிறிஸ்து, மக்களின் கேட்டறியும் திராணிக்கு தக்கதாக அவர்களிடம் பேசினார். இன்றைய வேத பகுதியிலிருந்து நாம் மூன்று குறிப்புகளைத் தியானிக்கலாம். முதலாவதாக, இயேசு யாரிடம் பேசுகிறாரோ அவர்களை மனதில் கொண்டு தம் பேசும் பாணியை மாற்றிக் கொண்டார். He adopted methods according to His audience’s ability and desire to understand. இன்று நாம் மேடை போட்டு, கூட்டம் கூட்டி, மிகுந்த சத்தமாகப் பேசினால் மட்டுமே நற்செய்தியை அறிவிக்க முடியும் என்று எண்ணுகிறோமோ? இரண்டாவதாக, இயேசு படித்த மேதையுடன் பேசும் போது அவனுக்குப் புரியும்படி பேசுகிறார். படிக்காத எளியவனோடு பேசும் போது அவனுக்கு புரியும்படி பேசுகிறார். மூன்றாவதாக, ஆத்தும வளர்ச்சியில் குழந்தையாய் இருப்பவர்களிடமும் ஆத்தும வளர்ச்சியில் பெரியவர்களாக இருப்பவர்களிடமும், அவரவர் திராணிக்குத் தக்கதாகப் பேசுகிறார். நம்முடைய திராணியை வளர்த்துக் கொண்டே போவதுதான் சிறந்தது. ஆண்டவரிடம் நம் நெருக்கமும், அனுபவமும், நம்முடைய திராணி வளரவளர அதிகரிக்கும். கர்த்தருடைய வேதமும் அவருடைய உறவும் தேனைவிட தித்திப்பாய் இருக்கிறது என்கிறார் தாவீது ராஜா (சங்கீதம் 19:10).
ஜெபம்:
ஆண்டவரே, உம்மோடு நெருங்கி வாழ்வதில் தொடர்ந்து வளர்ச்சி பெறவும், அதன் மூலம் கிடைக்கும் நித்திய மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கிருபை தாரும். ஆமென்.