மாற்கு 4: 35 – 41
மிகுந்த அமைதல் உண்டாயிற்று
மனிதனுடைய உள்ளத்தில் பல சமயங்களில் புயல் தோன்றுவது உண்டு. கணவன் மனைவி உறவில் புயல். பெற்றோர்கள் பிள்ளைகள் உறவில் புயல். தொழிலில் புயல். வேலை செய்யும் இடத்தில் புயல். எப்படிப்பட்ட புயலாக இருந்தாலும் அதை அதட்டி அமைதி உண்டாக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து. நம் வாழ்க்கையில் ஏற்படும் புயல்களை அடக்கி அமைதல் உண்டாக்க அவர் வல்லவராகவும், கருணை உள்ளவராகவும் இருக்கிறார். நாம் தான் அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும். கூப்பிட்டால் தேவசமாதானம் பெறுவது உறுதி.
ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்க்கையில் அடித்துக் கொண்டிருக்கும் புயலை அடக்கக்கூடியவர் நீர் ஒருவரே. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும். அமைதி உண்டாகும். ஆமென்.