காலைத் தியானம் – ஏப்ரல் 19, 2022

மாற்கு 5: 1 – 10

கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டு இருந்தான்   

                             பிசாசு பிடித்தவனால் மற்றவர்களுக்கு ஏற்படுகிற துன்பத்தை விட பிசாசு பிடித்தவனுக்கு ஏற்படும் துன்பமும் நஷ்டமுமே அதிகம். பிசாசு பிடித்தவன் தன்னையே காயப்படுத்திக்கொண்டிருந்ததாக வாசிக்கிறோம். கோபம் என்பது ஒரு பிசாசு. பிறர் பொருட்களை இச்சிப்பதும்  பேராசை கொள்வதும்கூட ஒரு பிசாசு தான். இப்படிப்பட்ட பிசாசு ஒருவனைப் பிடித்துக் கொள்ளுமானால், அது யாரைப் பிடித்துக்கொண்டதோ, அவனுக்கே நஷ்டத்தை உண்டாக்கிவிடும். எந்த பிசாசுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்.                                                      

ஜெபம்:

ஆண்டவரே, எந்த பிசாசும் என்னை அணுகாதபடி என் சிந்தனைகளையும் செயல்களையும் காத்துக்கொள்ளும். ஆமென்.