காலைத் தியானம் – ஏப்ரல் 20, 2022

மாற்கு 5: 11- 20

இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் . . . பிரசித்தம் பண்ணத் தொடங்கினான் 

                             இவ்வளவு நன்மைகளைப் பெற்றிருக்கும் போது எப்படி சும்மாயிருக்க முடியும்? நாம் பெற்ற நன்மைகள் எல்லாவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் பெற்ற தேவ சமாதானத்தையும், சந்தோஷத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏன் பகிர்ந்து கொள்ளவேண்டும்? பகிர்ந்து கொள்ளும்போது நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பகிர்ந்து கொள்வதால் நாம் வளர்ச்சி அடைகிறோம். பகிர்ந்து கொள்ளுகிறவன் இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுகிறான். மேலும் நாம் நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது மற்றவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கர்த்தர் செய்த நன்மைகளைச் சோர்ந்து போயிருக்கும் உன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அவனை/ அவளை ஊக்கப்படுத்து.                                                     

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குச் செய்துள்ள நன்மைகள் ஏராளம். நான் அவைகளை என் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் பகிர்ந்து, அவர்களை ஊக்குவிக்கக் கிருபை தாரும். ஆமென்.