காலைத் தியானம் – ஏப்ரல் 22, 2022

மாற்கு 5: 35 – 43

பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு

                             குழந்தை இறந்து போய்விட்டது என்ற செய்தி வந்துவிட்டது. அதற்குப் பிறகும் மன உறுதியுடன், விசுவாசமுள்ளவனாயிருக்க முடியுமா? நடைமுறையில் அது சாத்தியமா? வைத்தியர்களும் மற்றவர்களும், ”மன்னியுங்கள் எங்களால் முடிந்த எல்லாவித முயற்சிகளையும் எடுத்தோம். ஆனால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது” என்பார்கள். ஆண்டவருக்கு ”ஒன்றும் செய்ய முடியாது” என்ற நிலையே கிடையாது. ஜெபத்தில் குன்றி போக வேண்டாம். விசுவாசத்தில் தளர்ச்சியடைய வேண்டாம்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பலவீனன். அடிக்கடி சோர்ந்து போகிறேன். என் விசுவாசம் குன்றி போகாதபடிக்கு என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.