காலைத் தியானம் – ஏப்ரல் 23, 2022

மாற்கு 6: 1 – 6

வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்

                             மக்கள் அவிசுவாசிகளாக இருந்தபடியால் இயேசுவால் அற்புதங்கள் செய்யக் கூடாமல் போய்விட்டது.  இயேசுவிடம் சென்றால் அற்புதம் கிடைக்கும் என்று விசுவாசிக்கிறவன் அற்புதம் பெறுகிறான். விசுவாசம் இல்லாதவன் இயேசுவை தச்சனாகவும் மற்றுமொரு சாதாரண மனிதனாகவும் பார்க்கிறான். அவன் அற்புதங்களைப் பெறுகிறதில்லை. ஆலயத்தில் மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதில் ஆசீர்வாதம் உண்டு என்ற விசுவாசத்தோடு போகிறவன் ஆசீர்வாதத்தைப் பெற்று திரும்புகிறான்.  விசுவாசம் இல்லாதவன் குருவானவரையும், ஆலய வழிபாட்டையும் குறை கூறிக்கொண்டு திரும்புகிறான்.

ஜெபம்:

ஆண்டவரே, என் விசுவாசக் குறைவு உம்மிடமிருந்து வரக்கூடிய  நன்மைகளைத் தடை செய்யாதபடி என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.