காலைத் தியானம் – ஏப்ரல் 24, 2022

மாற்கு 6: 7 – 13

எவர்களாகிலும் உங்கள் வசனங்களைக் கேளாமலுமிருந்தால்

                             இயேசு தம் சீடர்களிடம், யாராவது உங்கள் வசனங்களைக் கேட்காமல் இருந்தால் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிட்ட தண்டனை அவர்களுக்கும் நேரிடும் என்று சொல்கிறார். இயேசுவின் சீடர்களை ஏற்றுக் கொள்ளாமலும் அவர்களுடைய வசனங்களைக் கேளாமலும் இருப்பதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இன்று இயேசுவின் வசனங்களை அசட்டை பண்ணுகிறவர்கள் அநேகர் உண்டு. அவதூறாய்ப் பேசுகிறவர்களும் உண்டு.  நீ இயேசுவை ஏற்றுக் கொண்டு அவருடைய வசனங்களைக் கேட்கிறாயா? அதிகாலையில் வேதம் வாசிக்கும்போது ஆண்டவருடைய வார்த்தை தான் உனக்குக் கிடைக்கின்றது என்பதை உணருகிறாயா? அவர் உன்னோடு பேசுவதைக் கேட்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, தினமும் நீர் என்னோடு பேசுவதைக் கேட்கும்படி என் காதுகளைத் திறந்தருளும். ஆமென்.