காலைத் தியானம் – ஏப்ரல் 25, 2022

மாற்கு 6: 14 – 29

 யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவனென்று ஏரோது அறிந்து அவனுக்குப் பயந்து

                             நீதிக்கும் நேர்மைக்கும் பரிசுத்தத்திற்கும் ஒரு வல்லமை உண்டு. அந்த வல்லமையைக் கண்டு ராஜாக்களும் பயப்படுவார்கள். யோவான் ஒரு சந்நியாசி. அவனைக் கண்டு ராஜாவாகிய ஏரோது பயப்பட்டான். தோட்டத்தில் இயேசுவைப் பிடிக்க சென்றவர்கள் இயேசுவைக் கண்டதும் பின்னிட்டு தரையிலே விழுந்தது ஏன்? நீதிக்கும் நேர்மைக்கும் பரிசுத்தத்திற்கும் ஒரு வல்லமை உண்டு.  இது 2000 ஆண்டுகளுக்கு முன் மட்டுமல்ல, இப்பொழுது கூட வெளிப்படும் வல்லமையாகத்தான் இருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஊழல்களில் மூழ்கி இருக்கும்போது, நீதியுடனும் நேர்மையுடனும் பரிசுத்தத்துடனும் வேலைசெய்யும் அதிகாரியிடம் இன்றும் அந்த வல்லமையைக் காணமுடிகிறது.

ஜெபம்:

ஆண்டவரே, அநீதியும் அக்கிரமமும் என்னைச் சுற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் என்னைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ளும். ஆமென்.