காலைத் தியானம் – ஏப்ரல் 26, 2022

மாற்கு 6: 30 – 34

வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்

                             அழைப்பவர் இயேசு. அவரோடு தனித்திருப்பதற்காக அழைக்கிறார். அவரோடு தனித்திருக்கிறாயா? நாம் அடிக்கடி ஆண்டவரோடு தனித்திருப்பதின் அவசியத்தைப் பற்றி வேதத்தில் பார்க்கிறோம். அது அடிக்கடி வலியுறுத்தப்படும் ஒரு ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை இன்று வாசித்த வேத பகுதி நமக்கு மறுபடியும் சுட்டிக்காட்டுகிறது. ஆகையால் இந்த ஒழுக்கத்தை அசட்டை பண்ணாதே. அவரைப் பற்றியே சிந்திப்பதற்கும், அவர் துதி பாடுவதற்கும் அனுதினமும் ஒரு நேரத்தைப் பிரத்தியேகப்படுத்தி வைத்திருக்கிறாயா? தனிமை அவசியம். இந்த உலகின் பாரங்கள், வேலைகள் உன்னை அவரிடமிருந்து இழுத்து விடாதபடி ஆண்டவரோடு உறவாட தனிமை அவசியம்.  அவரோடு தனித்திருக்கும் வேளை இளைப்பாறும் வேளை. உலகப் பாரங்களிலிருந்து இளைப்பாறும் வேளை. இளைப்பாறினால் புதுபெலனடைவாய்.

ஜெபம்:

ஆண்டவரே, தினமும் உம் பாதத்தருகே தனித்திருக்கிறேன். இளைப்பாறுதல் தாரும். ஆமென்.