காலைத் தியானம் – ஏப்ரல் 27, 2022

மாற்கு 6: 35 – 44

உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு?          

                             ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து இயேசு சுவாமி போஷித்த புருஷர் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேர். அப்படியொரு அற்புதத்தைச் செய்த இயேசுவிற்கு அந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இல்லாமல் 5000 பேரை போஷிக்க முடியாதா? கண்டிப்பாக முடியும். ஆனால் இயேசுவோ உங்களிடத்தில் உள்ளவைகளைக் கொண்டு வாருங்கள் என்கிறார். இரண்டாவதாக, அவர்களிடத்தில் இருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துதான் ஆசீர்வதித்தார். மூன்று அப்பங்களையும் ஒரு மீனையும் மாத்திரம் எடுத்துக்கொள்ளவில்லை. நீ உன்னை முழுவதுமாக உன் ஆண்டவரிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நீ செய்ய வேண்டிய உன் பங்கை முழுமையாகச் செய். ஆண்டவர் ஆசீர்வதிப்பார். அப்பொழுது, நடக்காது என்று நாம் நினைப்பது கூட நடக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய ஊழியத்தில் என் பங்கை முழுமையாகவும் முழு மனதோடும் செய்ய உதவி புரியும். ஆமென்.