காலைத் தியானம் – ஏப்ரல் 28, 2022

மாற்கு 6: 45 – 56

அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்        

                             இன்றும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர் அருகில் இருந்து விசுவாசத்தோடுஅவரைத் தொடுபவர்கள் சுகமடைகிறார்கள். நீ அவருக்கு எவ்வளவு சமீபத்தில் இருக்கிறாய்? இயேசுவைத் தொடக்கூடிய அளவுக்கு அவருடைய அருகில் இருக்கிறாயா அல்லது தூரத்தில் நின்று கொண்டு அவரைப் பார்த்துவிட்டுப் போய் விடுகிறாயா? அவரிடம் நெருங்கி வந்தால் உனக்கு இனிமையாய் தோன்றுகிற பாவங்கள் போய்விடும் என்று பயப்படுகிறாயோ? சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து விலகி, அவனுடைய வலைகளில் சிக்காமல் இயேசுவையே பிடித்துக்கொண்டு அவரோடு நெருங்கி ஜீவிப்போமாக.

ஜெபம்:

ஆண்டவரே, உமது உறவின் இனிமையை எனக்குத் தந்து பாவத்தின் மேல் வெறுப்பைத் தாரும். ஆமென்.