மாற்கு 7: 1 – 13
வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்
ஆராதனையில் வீணான ஆராதனை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் என்கிறார் இயேசு. இந்த நாட்களில் நீ மனிதருடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொண்டு தேவனுடைய கட்டளையைத் தள்ளி விடுகிறாயோ? மனிதருடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொண்டு சபைகளில் சண்டைபோட்டு வருகிறாயோ? மனிதனுடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொண்டு இளைஞர்கள் ஈடுபடக்கூடிய ஆராதனை வழிமுறைகளை ஒதுக்கி விடுகிறாயோ? உள்ளத்தின் முழு ஈடுபாடு இல்லாமல் உதடுகளால் மாத்திரம் செய்யப்படும் ஆராதனை வீணான ஆராதனை.
ஜெபம்:
ஆண்டவரே, பாரம்பரியம் என்ற பெயரில் உள்ளத்தின் ஈடுபாடு இல்லாமல் உதடுகளால் மட்டுமே செய்யும் ஆராதனையிலிருந்து என்னை விடுவியும். எங்கள் சபையை உயிர்ப்பியும். ஆமென்.