காலைத் தியானம் – ஏப்ரல் 30, 2022

மாற்கு 7: 14 – 24

அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்        

                             மறுபடியும் பாரம்பரியங்களை உடைத்து எறிகிறார் இயேசு கிறிஸ்து. அதைச் சாப்பிடாதே இதைச் சாப்பிடாதே என்று பழைய ஏற்பாட்டு காலங்களில் பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன. மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகிறது ஒன்றும் அவனைத் தீட்டுப்படுத்துவதில்லை என்று இயேசு சொல்கிறார். சடங்காச்சாரங்களைப் பிடித்துக்கொண்டு சத்தியத்தை விட்டுவிடக்கூடாது. சத்தியம் என்ன? உள்ளத்திலிருந்து புறப்படுகிற தீய எண்ணங்களே மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்பதுதான் சத்தியம்.  திருடுகிறதினால் ஒரு மனிதன் திருடனாவதில்லை.  மனதளவில் அவன் ஏற்கனவே திருடனாக இருப்பதினால் அவன் திருடுகிறான்.

ஜெபம்:

ஆண்டவரே, என் சிந்தனைகளை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும் ஆமென்.