காலைத் தியானம் – மே 01, 2022

மாற்கு 7: 25 – 37

நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம்   

                             கிரேக்கப் பெண் கூறிய அந்த வார்த்தைகளில் அப்படி என்ன விசேஷம்? அந்த பெண்ணின் வார்த்தைகள் அவளுடைய விசுவாசத்தையும் விடாப்பிடியையும் பிரதிபலிக்கின்றன. பிள்ளைகளுக்கு உணவு கொடுத்த பின்தானே வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்க் குட்டிகளுக்கு உண்ண உணவு கொடுக்க முடியும் என்று இயேசு கேட்கிறார். தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நற்செய்தியைக் கொடுத்து, தேவ வல்லமையைக் காண்பித்து, அவர்களை தேவனோடு ஒப்புரவாக்கிய பின்னர் தானே கிரேக்கர் முதலான புறஜாதிகளிடம் வர முடியும் என்பது இதன் பொருள். கிரேக்கப் பெண் சோர்ந்து போகவில்லை. அவள் விசுவாசம் குறையவில்லை. நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடமாட்டேன் என்ற பிடிவாதம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது. உன் ஜெபத்திற்குப் பதில் கிடைக்க தாமதம் ஆகி விட்டதால் ஜெபிப்பதையே விட்டு விட்டாயோ?

ஜெபம்:

ஆண்டவரே, சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டிய விசுவாசத்தால் என்னை நிரப்பியருளும். ஆமென்.