காலைத் தியானம் – மே 02, 2022

மாற்கு 8: 1 – 9

ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன்  

                             மாற்கு ஆறாம் அதிகாரத்தில் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேரை போஷித்ததைப்பற்றி வாசித்தோம். இன்று, இயேசு ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் வைத்து நாலாயிரம் பேர் சாப்பிட்டு திருப்தி அடையும்படி செய்ததைப் பார்க்கிறோம். இயேசு இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் மக்களை தேவனோடு ஒப்புரவாக்குவதற்குத்தான். He came to reconcile man with God. ஆனாலும் மக்களின் சரீரப் பிரகாரமான தேவைகளை அவர் புறக்கணிக்கவில்லை. இன்று நாம் மிஷனரிகளைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறோம். ஆனால் அவர்களுடைய சரீரப் பிரகாரமான தேவைகள் பூர்த்தி செய்யப் படுகின்றனவா? பூர்த்தி செய்வதில் உன் பங்கு என்ன?

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய ஊழியக்காரர்கள் மீது எங்களுக்குக் கரிசனையைத்  தாரும். ஆமென்.