காலைத் தியானம் – மே 03, 2022

மாற்கு 8: 10 – 21

பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதுடைய புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்        

                             புளித்த மாவென்பது தீய பழக்கங்களையும், பாவங்களையும் அவைகளுடைய பரவும் தன்மையையும் குறிக்கின்றது. பரிசேயர், ஏரோது ஆகியோரின் புளித்த மாவென்பது உள்ளத்தைக் கொஞ்சம்கூடத் தொடாத வெளிப்படையான சடங்காச்சாரங்களையும், பதவி ஆசைகளையும், அதிகாரம் பண்ணவேண்டும் என்ற ஆசையும், துணிகரப் பாவத்தில் ஈடுபடுவதையும் குறிக்கின்றது. உன் பக்தி எப்படிப்பட்டது? உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் பக்தியா அல்லது வெறும் சடங்காச்சாரம்தானா? உன் நாட்டம் இயேசுவைச் சேவிப்பதில் இருக்கிறதா அல்லது பதவியிலும் அதிகாரம் செலுத்துவதிலும் இருக்கிறதா? புளித்த மாவைக் குறித்து ஜாக்கிரதையாயிரு.

ஜெபம்:

ஆண்டவரே, என் சிந்தனைகளும் செயல்களும் எப்பொழுதும் உம்மையே சார்ந்திருப்பதாக. ஆமென்.