மாற்கு 8: 22 – 30
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்
இது மிகவும் எளிதான கேள்வி போல தோன்றுகிறது. ஆனால் இது அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி அல்ல. உறவு சம்பந்தப்பட்ட கேள்வி. ஆகையால் புத்தகங்களைப் படித்து, பிரசங்கங்கள் பலவற்றைக் கேட்டு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. முயற்சி செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட பதிலில் உயிர் இருக்காது. ஆகையால்தான் இயேசுவைக் குறித்து சிறந்த மனிதர், புனிதர், தீர்க்கதரிசி, பல தெய்வங்களுள் ஒருவர், ஒரு காலகட்டத்தில் பூமியில் மனிதனாக வாழ்ந்து மரித்துவிட்டவர் என்று பலவிதமான அரைகுறை விளக்கங்களும் தவறான பதில்களும் மனிதரிடையே சுற்றி வருகின்றன. இயேசு யார் என்ற கேள்வி இன்று உன்னிடம் கேட்கப்படுகிறது. உன் பதில் என்ன? இயேசு கிறிஸ்துவோடு நீ கொண்டுள்ள உறவைப் பொறுத்துதான் உன் அனுபவம் இருக்கும். உன் அனுபவத்திலிருந்து தான் உண்மையான பதில் வெளிவரும்.
ஜெபம்:
ஆண்டவரே, என் பாவங்கள் அடிக்கடி என்னை உம்மை விட்டுப் பிரித்து விடுகின்றன. உம்மோடு நெருங்கி வாழும் உறவின் உன்னத அனுபவத்தைத் தாரும். விழுந்து விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.