காலைத் தியானம் – மே 08, 2022

மாற்கு 9: 19 – 27

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்        

                             நாம் எல்லாரும் கண்ணீரோடே செய்ய வேண்டிய ஜெபம் இது. நம்முடைய விசுவாசமும் குறைவு படும் தருணங்கள் உண்டு. நம் விசுவாசத்தை அசைக்கிற அனுபவங்கள் நமக்கு உண்டு. சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்று சந்தேகத்தை அனுப்பி நம்முடைய விசுவாசத்தைக் குறைவு படச் செய்வது. விசுவாசம் குறைந்தால் இயேசுவைக் காண முடியாது. அற்புதங்களைக் காண முடியாது. ஆனால் விசுவாசம் இருக்கும் இடத்தில் இன்றும் அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விசுவாசிகளின் வாழ்க்கை வரலாறுகளையும், அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற அற்புதங்களையும் குறித்து அடிக்கடி வாசியுங்கள். ஒருவருக்கொருவர் கர்த்தர் செய்த அற்புதங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பிதாவாகிய தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் விசுவாசம் உறுதிப்படும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் அவிசுவாசத்தை நீக்கி, விசுவாசத்திலே என்னை உறுதிப்படுத்தும். ஆமென்.