காலைத் தியானம் – மே 09, 2022

மாற்கு 9: 28 – 37

முதல்வனாயிருக்க விரும்பினால்    

                           முதல்வனாய் இருக்க விரும்பாதவர்கள் ஒருவருமில்லை. பள்ளியில் படிக்கும் சிறுவன் வகுப்பில் முதல்வனாய் இருக்க விரும்புகிறான். வேலை செய்கிறவன் அலுவலகத்தில் promotion பெற்று முதல்வனாய் இருக்க விரும்புகிறான். திருச்சபையிலும் கூட பலர் முதல்வனாய் இருக்க விரும்புகிறார்கள். அதற்கு இயேசு ஒரு வழி சொல்கிறார். மிகவும் கடினமாகத் தோன்றும் வழி. ஆனால் அதுதான் நிச்சயமான வழி. அது இயேசுவோடு நெருங்கிய உறவு வைத்திருப்பவர்கள் அதிக முயற்சி இல்லாமலேயே கடந்து செல்லும் வழி. முதல்வனாய் இருக்க விரும்புகிறவன், நான் கடையன் என்ற சிந்தனை உள்ளவனாயிருக்க வேண்டும். உதவி தேவைப் படுகிற எல்லாருக்கும் எந்த நேரத்திலும் உதவி செய்பவனாக இருக்க வேண்டும். தான் பெற்ற அறிவு, பொருட்கள், தாலந்துக்கள் ஆகியவற்றை தனக்கென்று மாத்திரம் வைத்துக்கொள்கிறவன் முதல்வனாக இருக்க முடியாது.

ஜெபம்:

ஆண்டவரே, என் அறிவு, பொருட்கள், தாலந்துகள் யாவற்றையும் உமக்காகவும் மற்ற மனிதருக்காகவும் உபயோகிக்கக் கிருபை தாரும். ஆமென்.