காலைத் தியானம் – மே 10, 2022

மாற்கு 9: 38 – 50

தறித்துப் போடு . . .  பிடுங்கிப் போடு    

                           நாம் அடிக்கடி வாசிக்கும் சில வேதாகமப் பகுதிகளை அவற்றின் ஆழத்தையும், தீவிரத் தன்மையையும் உணராமலே வாசித்துவிடுகிறோம். இன்று வாசித்த வசனங்களில் தீவிரக் கண்டிப்பையும் எச்சரிக்கையையும் காண்கிறோம். கால் இடறலாய் இருந்தால் காலைத் தறித்துப் போடு; கண் இடறல் உண்டாக்கினால், கண்ணைப் பிடுங்கிப் போடு என்பது மிகவும் தீவிரமான கண்டிப்பு. உன் உள்ளமும் கண்களும், கால்களும் உன் இடறலுக்குக் காரணமாயிருக்கும்போது, மற்றவர்களைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யாதே. அடுத்த முறை உன் அவயவங்கள் உனக்கு இடறல் உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும்பொழுது இந்த வசனங்களை நினைத்துக்கொள். ஆண்டவர் உன்னைத் தீங்கிலிருந்து விலக்கிக் காப்பார்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பலவீனன். என் சரீரமும் பலவீனமானது. என் சரீரம் என்னை மேற்கொள்ளாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.