காலைத் தியானம் – மே 11, 2022

மாற்கு 10: 1 – 12

அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்    

                           ஒரே மாம்சமாகிவிட்டால், நான்-நீ என்று பிரித்துப் பார்க்க முடியாது. இவை என்னுடையவைகள், அவை உன்னுடையவைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கே சொல்லப்பட்டுள்ளது ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ளும் நிலை (tolerating each other) அல்ல.  இருவரும் இணைந்து விட்ட நிலை. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழும் அநேகக் குடும்பங்களில், பெரிய பிரச்சனைகள் இல்லாவிட்டால் கூட, இப்படிப்பட்ட பிணைப்பு, ஒரே மாம்சமாகிவிட்ட நிலை, காணப்படுவதில்லை. குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி, கர்த்தர் மூவரும் இணைந்து இருந்தால் மாத்திரமே கணவனும் மனைவியும் ஒரே மாம்சம் என்னும் நிலைக்கு வரமுடியும். உன் குடும்பத்தில் கணவன் மனைவி உறவு எப்படிப்பட்டதாக இருக்கிறது?

ஜெபம்:

ஆண்டவரே, நாங்கள் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ளும்படி அல்ல, ஒரே மாம்சமாயிருக்கும்படி எங்கள் குடும்ப வாழ்க்கையை மாற்றியருளும். ஆமென்.