காலைத் தியானம் – மே 13, 2022

மாற்கு 10: 23- 31

மறுமையிலே நித்திய ஜீவனையும்  

                           உன் பார்வை இந்த பூலோக வாழ்க்கையோடு நின்று விடுகிறதா அல்லது இந்த பூலோக வாழ்க்கையையும் தாண்டிச் சென்று, அதற்கு அப்பால் இருக்கும் வாழ்க்கையையும் எட்டிப் பிடிக்கும் பார்வையாயிருக்கிறதா? இந்த பூலோக வாழ்க்கை ஒரு நிமிட வாழ்க்கை. அதற்குப் பின்னுள்ள வாழ்க்கை நித்திய கால வாழ்க்கை. அதைப் பரலோகத்தில் செலவழிக்கப் போகிறாயா அல்லது நரகத்தில் செலவழிக்கப் போகிறாயா என்பது உன்னுடைய முடிவுதான். நீ உன் பரலோக வாழ்க்கைக்காக ஆயத்தம் செய்து வருகிறாயா? பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் என்பது இயேசுவின் கட்டளை.

ஜெபம்:

ஆண்டவரே, இப்பூமியில் நான் இருக்கும் நாட்களில், நித்திய காலமாய் வாழப்போகும் மறுமைக்காக ஆயத்தப்பட உதவி செய்யும். ஆமென்.