காலைத் தியானம் – மே 14, 2022

மாற்கு 10: 32- 41

உமது வலது பாரிசத்திலும் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி  

                           இயேசுவின் மந்திரிகளாயிருந்து இயேசுவோடு அரசாள வேண்டும் என்ற ஆசை நல்ல ஆசைதான். ஆனால் இயேசுவோடு சேர்ந்து பாடுபட்டால் மாத்திரமே இயேசுவோடு சேர்ந்து அரசாளமுடியும் என்ற பாடம் சீடர்களுக்குத் தெரியவில்லை. அந்த பாடமும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இயேசுவுக்காக வாழும் வாழ்க்கையில் துன்பங்கள் வரும். அவற்றை எப்படிக் கையாளுகிறோம்? கிறிஸ்தவர்கள் சிலர் கூடியிருந்த ஒரு சிறிய கூட்டத்தில், ஒவ்வொருவரும் தான் வேலை செய்யும் இடத்தில் உண்மையான கிறிஸ்தவனாய் இருப்பதினால் தான் சந்திக்கும் சிக்கல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் பற்றி சொல்லிக் கொண்டே வந்தனர். ஒருவன் மாத்திரம் தான் வேலை செய்யுமிடத்தில் தனக்கு எந்த வித துன்பமும் இல்லை என்றான். ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்த மற்றவர்களுக்கு அவன் கொடுத்த விளக்கம், “நான் கிறிஸ்தவன் என்றே நான் வேலை செய்யுமிடத்தில் யாருக்கும் தெரியாது” என்பதுதான். நீ வேலை செய்யுமிடத்தில் உன் நிலை எப்படி?

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய நாமத்தினிமித்தம் நான் கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும் போது அவற்றைத் தாங்கிக்கொள்ள வேண்டிய பெலனைத் தாரும். ஆமென்.