மாற்கு 10: 42- 52
நான் பார்வையடைய வேண்டும்
நாமும் கண்கள் திறக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். எத்தனை காரியங்கள் நம் கண்களுக்கு மறைவாய் இருக்கின்றன! சாதாரண ஒரு காட்டுப்பூவில் கூட ஆண்டவரின் படைப்பின் அதிசயத்தைக் காணமுடிகிறது. ஆண்டவர் செய்யும் அற்புதங்களை அற்புதக் கூட்டங்களில் மாத்திரம் தான் காண முடியும் என்றில்லை. ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் ஆண்டவரின் அற்புதத்தைக் காணமுடிகிறது. சங்கீதக்காரன் வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறான் (சங் 19:1). உன்னைச் சுற்றி நடக்கும் அநேக அற்புதங்களையும், உன்னை சுற்றியிருக்கும் ஆண்டவரின் படைப்பின் அதிசயத்தையும் உன்னால் பார்க்க முடிகிறதா?
ஜெபம்:
ஆண்டவரே, அனுதினமும் உமது மகத்துவத்தைக் காண்பதற்கு எனக்குப் பார்வை கொடுத்திருப்பதற்காக நன்றி. என் பார்வை மங்கி விடாதபடி காத்துக்கொள்ளும். ஆமென்.