மாற்கு 11: 1 – 11
உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்
பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா, ஈராக் நாடுகளுக்கிடையே போர் நடந்த நாட்களில், பாக்தாத் நகரை அமெரிக்க வீரர்கள் கைப்பற்றியவுடன் பாக்தாத் மக்கள் சாலைகளில் வந்து ஆர்ப்பரித்ததைத் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். ஏன் ஆர்ப்பரித்தார்கள்? சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலை என்ற மகிழ்ச்சி! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பவனி வரும்போது ஏன் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்? ரோமர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுத் தர தாவீதின் சிங்கம், யூதா கோத்திரப் பிரபு வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சி பெருக்கினால் பாடினார்கள். இயேசு அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர வரவில்லை. அதற்கு மேலான பரலோக வாழ்வை உனக்கும் எனக்கும் கொடுப்பதற்காக பூமிக்கு வந்தார். அவரை வாழ்த்தி வரவேற்று ஆர்ப்பரித்துப் பாடுகிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, என்னைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, பரலோக வாழ்க்கைக்காக ஆயத்தப்படுத்தியிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறேன், புகழ்ந்து பாடுகிறேன், ஆர்ப்பரிக்கின்றேன். ஆமென்.