காலைத் தியானம் – மே 18, 2022

மாற்கு 11: 20 – 33

நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது

                           ஜெபம் பண்ணும்போது கவனிக்க வேண்டிய இரண்டு குறிப்புகள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. முதலாவது உனக்கும் தேவனுக்கும் உள்ள உறவு சரியாக இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ளவேண்டும். தேவன் விரும்பாத காரியங்களைத் துணிந்து செய்துவிட்டு தேவனிடத்தில் ஜெபம் பண்ணுவதில் எந்த பிரயோஜனமுமில்லை. இரண்டாவதாக உனக்கும் மற்ற மனிதருக்குமிடையே உள்ள உறவு சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். பிறருடன் சண்டை போட்டுக்கொண்டு (உன் மேல் தப்பு இல்லை என்றால் கூட) முறிந்த உறவை சீர்ப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், ஜெபம் பண்ணுவதிலும் பிரயோஜனம் இல்லை.

ஜெபம்:

ஆண்டவரே, என் சகோதரனோடு ஒப்புரவாக எனக்கு வேண்டிய தாழ்மையையும் பொறுமையையும் கற்றுத் தாரும். ஆமென்.