காலைத் தியானம் – மே 20, 2022

மாற்கு 12: 13 – 17

இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?

                           உன்னில் காணப்படும் சுரூபம் யாருடைய சுரூபம்? உன்மேல்  எழுதப்பட்டிருக்கும் எழுத்து யாருடைய எடுத்து? உன்மேல் இருக்கும் முத்திரை யாருடைய முத்திரை? நீ தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவன்(ள்). ஆகையால் உன் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களும் தேவனுடையவைகளாகத் தானே இருக்க வேண்டும்! உலகம் தன் எழுத்துக்களை உன்மேல் பதிப்பதற்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாயோ? நீ தேவனுக்குச் சொந்தம் என்றால் அவர் முத்திரை தானே உன் மேல் காணப்படவேண்டும்! தினமும் வேலைக்கு போகுமுன், நான் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவன்(ள்); தேவன் தமது எழுத்துக்களை என்மேல் பதித்திருக்கிறார், ஆகையால் நான் தேவனுக்கே சொந்தம் என்று சொல்லிக் கொண்டே போ.

ஜெபம்:

ஆண்டவரே, உமது சாயலில் உருவாக்கப்பட்ட நான் உமக்கு சொந்தமாகவே இருக்க விரும்புகிறேன். சாத்தான் என்னை இழுத்து விடாதபடி பாதுகாத்துக் கொள்ளும். ஆமென்.