காலைத் தியானம் – மே 21, 2022

மாற்கு 12: 18 – 27

அவர்கள் பரலோகத்திலிருக்கிற தேவதூதரைப் போலிருப்பார்கள்

                           அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாமல் எழுந்திருக்கும் என்பது பவுல் அப்போஸ்தலனின் போதனை. இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்வரும் வாழ்க்கை மகிமையுள்ள வாழ்க்கை. நித்திய வாழ்க்கை. அதில் உனக்குப் பங்கு உண்டு என்ற நிச்சயம் உனக்கு உண்டா? அந்த நித்திய வாழ்க்கைக்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள சிந்தை நம்மில் வலுவடைந்து கொண்டே போகிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.  

ஜெபம்:

ஆண்டவரே, கடந்த நாட்களை விட வரும் நாட்களில் நான் உம்மோடு அதிக நேரம் செலவழிக்கவும் உம்முடைய சத்தத்துக்காகக் காத்திருக்கவும் கிருபை தாரும். ஆமென்.