காலைத் தியானம் – மே 22, 2022

மாற்கு 12: 28 – 34

கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது?       

                           இந்தக் கேள்வியைக் கேட்ட வேதபாரகன் ஏன் அப்படி கேட்டான் என்று சொல்லப்படவில்லை. ஒருவேளை பிரதான கற்பனை என்று ஒன்று இருக்குமானால் அதை மாத்திரம் கைக்கொண்டு விட்டு, மற்ற கற்பனைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைத்திருப்பானோ? அல்லது நான் ஒன்பது கற்பனைகளைக் கைக்கொண்டு வந்திருக்கிறேன், ஒரே ஒரு கற்பனையை மட்டும் தான் விட்டிருக்கிறேன் என்று கூறி 90% மதிப்பெண் இயேசுவினிடத்தில் கேட்கலாம் என்று எண்ணியிருப்பானோ? கற்பனைகள் விஷயத்தில் இந்த கணக்கு செல்லுபடியாகாது. ஒரு குண்டு பட்டு செத்தவனும் செத்தவன் தான். 10 குண்டுபட்டு செத்தவனும் செத்தவன் தான். 

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய இரக்க சிந்தை, எனக்கு பாவம் செய்வதற்கு கிடைத்த சுதந்திரம் அல்ல என்பதை அறிவேன். உமது கற்பனைகள் எல்லாவற்றையும் கைக்கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.