காலைத் தியானம் – மே 23, 2022

மாற்கு 12: 35 – 44

இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள்   

                      காணிக்கை கொடுப்பதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு காரியம் உண்டு. எவ்வளவு காணிக்கை கொடுத்திருக்கிறேன் என்பது கணக்கு அல்ல. காணிக்கை கொடுத்த பின் என்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதே நான் கொடுத்த காணிக்கைக்கு அளவுகோல்.  500 ரூபாய் காணிக்கை கொடுத்த பின் என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்குமானால் நான் கொடுத்தது பெரிய காணிக்கை அல்ல. நீ எப்படி காணிக்கை கொடுக்கிறாய்?           

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடையதை உமக்குக் கொடுக்க (தேவனுடையதை தேவனுக்குக் கொடுக்க) எனக்குக் கற்று தாரும். ஆமென்.