மாற்கு 13: 1 – 13
முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே ரட்சிக்கப்படுவான்
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எருசலேம் தேவாலயம் ஏரோதுவினால் மிகவும் பிரமாண்டமான, உறுதியான கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் ஒரு பாறை போல் இருக்குமாம்! அவ்வளவு பிரமாண்டமான கற்கள். ஆனாலும் அவைகள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி அழிக்கப்பட்டு போகும் என்றார் இயேசு. அப்படியே எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டு போயிற்று. மிகவும் உறுதியானவை என்று நீ எண்ணிக்கொண்டிருப்பவைகள் அழிந்து போகலாம். அழியாத உறுதியான பொருள் ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது தான் கிறிஸ்து. கிறிஸ்து என்ற பாறையின் மேல் நின்று கொண்டால் நீ இரட்சிக்கப் படுவாய். முடிவுபரியந்தம் நிலை நிற்க முடியும். நன்றாக ஆரம்பித்து, அதிக தூரம் இயேசுவோடு பயணித்த பின் விழுந்தவர்கள் அநேகர். ஒவ்வொரு நாளும் நீ கவனமாயிரு.
ஜெபம்:
ஆண்டவரே, உம் மீது என் வாழ்க்கையைக் கட்டுகிறேன். ஆசீர்வதியும். ஆமென்.