காலைத் தியானம் – மே 25, 2022

மாற்கு 13: 14 – 23

மலைகளுக்கு ஓடிப்போகக் கடவீர்கள்           

                       நான் என் துணிகளை எடுத்துக்கொண்டு வந்து விடுகிறேன் என்று நினைத்து கூட வீட்டிற்குப் போகக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. என்ன செய்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு விட்டு ஓடிப்போக வேண்டும். மலைகளுக்கு ஓடிப்போக வேண்டும். திரும்பிப் பார்க்காமல் ஓட வேண்டும் என்பது கட்டளை. மலைகளின் பிளவுகளில் ஒதுங்குவதற்கும் பாதுகாப்பு பெறுவதற்கும் இடமுண்டு. பிளவுண்ட மலையே,  புகலிடம் தாருமே.         

ஜெபம்:

ஆண்டவரே, எனக்கு ஆபத்து வரும்போது, பின் திரும்பாமல் உம்மை நோக்கி ஓடி வருவதற்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருளும். ஆமென்.