காலைத் தியானம் – மே 26, 2022

மாற்கு 13: 24 – 37

விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்        

                       நல்ல நிம்மதியான, அயர்ந்த தூக்கம் நம் உடலுக்கும் மனதிற்கும் மிகவும் அவசியம்தான். சொல்லப்போனால் தினமும் புத்துணர்ச்சி தரும் நல்ல தூக்கம் ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள ஒரு பெரிய ஆசீர்வாதம். ஆனால் அதே தூக்கத்திற்கு நாம் அடிமையாகி விட்டால் அது நம்மை வீழ்த்திவிடும். ஜெபத்தின் மூலம் மேற்கொள்ள முடியாத காரியம் ஒன்றுமில்லை. துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உன்னுடைய ஜெபம் மிகுந்த ஆறுதலையும் சமாதானத்தையும் கொடுக்கும். ஆகையால் விழித்திருந்து ஜெபம்பண்ணு. விழித்திருந்து ஜெபம் பண்ணுவது நமது தயார் நிலையையும் காண்பிக்கிறது.       

ஜெபம்:

ஆண்டவரே, நீர் திரும்ப வரும் வரைக்கும் நான் விழித்திருந்து உம்மோடு உறவாடிக்கொண்டிருக்க கிருபை தாரும். ஆமென்.