மாற்கு 14: 1 – 11
என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்
மிகவும் விலை உயர்ந்த தைலத்தை எடுத்து இயேசுவின் மேல் ஊற்றியது ஒரு ஊதாரித்தனமான செலவு என்று தான் சாதாரண மனிதனின் கண்களுக்குப் படுகிறது. ஆனால் இயேசுவோ அதை அனாவசியமான செலவு என்று சொல்லவில்லை. உன் நேரம் உனக்கு பொன்னாக இருக்கலாம். பொன்னான அந்த நேரத்தை கணக்குப் பார்த்து தான் செலவழிக்க வேண்டும். ஆனால் இயேசுவுக்கென்று செலவிடும்போது கணக்குப் பார்த்து தான் செலவழிக்கிறாயோ? இன்று வேலை அதிகமாய் இருக்கிறது, ஆகையால் வேதம் வாசிக்கும் நேரத்தையும் ஜெபிக்கும் நேரத்தையும் குறைத்துக் கொள்வேன் என்கிறாயோ? உன் நேரத்தில் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை யோசித்துப் பார்.
ஜெபம்:
ஆண்டவரே, எந்த அளவுக்கு எனக்கு இங்கு வேலை அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக நேரம் உம்மோடு செலவழிக்க உதவி செய்யும். ஆமென்.