காலைத் தியானம் – மே 29, 2022

மாற்கு 14: 22 – 31

நீங்கள் எல்லாரும் இடறலடைவீர்கள்      

                        இயேசுவின் மூன்றரை வருட கால ஊழியத்தில் அவருடைய வார்த்தைகளினாலும் செயல்களினாலும் தொடப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் 12 சீடர்கள். ஆனால் இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் ஒருவர்கூட இயேசுவின் பக்கத்தில் நிற்கவில்லை. எல்லாரும் இடறல் அடைந்தார்கள். ஏன்? இயேசு பரலோக ராஜ்யத்தை பற்றி பேசும் போது, சீடர்கள் பூலோகத்தில் ரோமர்களை அடித்து விரட்டி விட்டு, இயேசு ஆட்சி அமைக்கப் போகிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அது மாத்திரமல்ல, சீடர்கள் தங்கள் சுயபெலனை நம்பி நாங்கள் இடறலடைய மாட்டோம் என்றார்கள்.  உன் நம்பிக்கை எப்படிப்பட்டது? உன் சுயபெலனில் நிற்க முயன்றால் விழுந்து விடுவாய். கிறிஸ்து என்னும் கன்மலையின்மேல் நின்றால் இடறலடைய மாட்டாய்.   

ஜெபம்:

ஆண்டவரே, நீர் பெலன் கொடுக்காவிட்டால் என்னால் நிற்க முடியாது. இடறலடைவது நிச்சயம். உம்மை மறுதலியாமல் இருக்க, உமது போதனைகளில் இருந்து விலகி விடாமல் இருக்க, எனக்குப் பெலன் தாரும். ஆமென்.