காலைத் தியானம் – மே 31, 2022

மாற்கு 14: 43 – 54

அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்       

                        சில மணி நேரங்களுக்கு முன் தான் நாங்கள் மரிக்க நேரிட்டாலும் உம்மை மறுதலிக்க மாட்டோம், இடறலடைய மாட்டோம், உம்மோடு நிற்போம் என்று சீடர்கள் கூறினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள். நாமும் இயேசுவை விட்டு ஓடிப் போகாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உறவினருக்காக, நண்பருக்காக, பணத்திற்காக, அல்லது உத்தியோக உயர்வுக்காக நீதியையும் நியாயத்தையும் உண்மையையும் விட்டு விலகினால் இயேசுவை விட்டு ஓடிப் போய்க்கொண்டிருக்கிறாய் என்று தான் அர்த்தம்.  

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மை விட்டு ஓடிப்போகாதபடி என்னைக் காத்துக் கொள்ளும் ஆமென்.