மாற்கு 14: 66 – 72
பேதுரு நினைவுகூர்ந்து மிகவும் அழுதான்
இயேசுவோடு மூன்றரை ஆண்டுகள் நெருக்கமாக வாழ்ந்து வந்த பேதுரு எப்படி இயேசுவை மறுதலிக்கமுடியும் என்று நாம் நினைக்கலாம். முதலாவது முறை சேவல் கூவினபோதாவது பேதுருவுக்கு இயேசு சொன்னது நினைவுக்கு வந்திருக்கலாமே என்றுகூட நினைக்கலாம். பேதுருவின் செயல், எளிதில் மனிதன் விழக்கூடியவன் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. It reminds us of human vulnerability. இயேசுவை மறுதலித்த பேதுரு அழுதான். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்தும் மனஸ்தாபப்பட்டான் என்று மத்தேயு27:3ல் பார்க்கிறோம். பேதுரு இயேசுவிடம் வந்தான். யூதாஸ் இயேசுவை விட்டு விலகிச் சென்று தற்கொலை செய்துகொண்டான். பேதுரு உயிர்த்தெழுந்த இயேசுவின் உதவியோடு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு உலகெங்கும் திருச்சபை எழும்புவதற்கு அஸ்திபாரமாக வாழ்ந்தான். யூதாஸ் அப்படிப்பட்ட வாய்ப்பை இழந்துவிட்டான். நீ உன் ஆண்டவரின் உதவியோடு, அவரை மறுதலிக்காமல் (கிறிஸ்து என்னும் அவருடைய பெயருக்கு அவமானம் வராதபடி) வாழ்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, உமக்குப் பெருமை தரக்கூடிய வாழ்க்கை வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.