மாற்கு 15: 1 – 15
நான் என்ன செய்யவேண்டும்
யூத மதத் தலைவர்களுக்குக் கொலைத் தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது என்பதால், பிரதான ஆசாரியர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும், தகுந்த ஆதாரம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இயேசுவை ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவிடம் கொண்டு செல்கின்றனர். பிலாத்துவின் விசாரணையில் இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதை வெளிப்படையாகவும் சொல்லுகிறார். ஆனால் அதையே தீர்ப்பாகச் சொல்ல தைரியம் இல்லை. நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படவேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருக்கவில்லை. அவர் மக்களைப் பிரியப்படுத்த விரும்பினார். ஆகையால் கொலை செய்ய வழி தேடியவர்களிடமே, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். ஆண்டவர் உனக்கும் சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்புகளை நிறைவேற்றும்போது நீ யாரைப் பிரியப்படுத்த விரும்புகிறாய்? உன் ஆண்டவரையா அல்லது உன்னைச் சுற்றியிருக்கும் மக்களையா?
ஜெபம்:
ஆண்டவரே, உம்மைப் பிரியப்படுத்தும்படியாகவே நான் என் வேலையைச் செய்ய எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.