காலைத் தியானம் – ஜூன் 09, 2022

லூக்கா 1: 1 – 12    

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் அறிந்த நானும்      

                        மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த பரிசுத்த லூக்கா ஒரு கிரேக்க மேதை. அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் அறிந்தவற்றையும், கேள்விப்பட்டவற்றையும், வாசித்தவற்றையும் சேகரித்து, ஆராய்ந்து நமக்கு தொகுத்து தந்திருக்கிறார். வேத வசனங்களைத் திட்டமாய் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர் நமக்குச் சொல்லித் தரும் பாடம். நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக வேதாகமத்தை வாசித்துக்கொண்டு போவதில் பிரயோஜனமில்லை. வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  வாசித்த பகுதிகளைத் தியானிக்க வேண்டும். அப்போது கர்த்தர் உன்னோடு பேசுவார். வேதவசனங்கள் உனக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் வேதத்தை வாசிக்கும் போது நீர் என்னோடு பேசும். ஆமென்.