காலைத் தியானம் – ஜூன் 10, 2022

லூக்கா 1: 13 – 25    

நீ விசுவாசியாதபடியினால் …. ஊமையாயிருப்பாய்    

                        சகரியா ஆண்டவரோடு அடிக்கடி பேசி, அவரோடு நெருங்கி வாழ்ந்தபோதிலும் அவருடைய வார்த்தையை நம்பவில்லை. வயோதிப காலத்தில் பிள்ளைப் பெறுவது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்தான். விசுவாசியாத அவன் உடனேயே அதற்குரிய தண்டனையைப் பெற்றான். உன் ஆண்டவருக்கு முடியாதது ஒன்றும் இல்லை என்பதை இன்னும் உணராமல் இருக்கிறாயோ? ஆண்டவர், தாம் கொடுத்துள்ள வாக்குத்தத்தங்களைக் குறித்த நேரத்தில் கண்டிப்பாக நிறைவேற்றுவார். விசுவாசத்தில் குறைவுள்ள நமக்கு, சகரியாவுக்குக் கிடைத்த தண்டனையைப் போன்ற தண்டனை கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் விசுவாசக் குறைவால், நாம் பெற வேண்டிய நன்மைகளைப் பெறாமல் இருப்பதே தண்டனைதான்.

ஜெபம்:

ஆண்டவரே, இத்தனை ஆண்டுகள் என்னை வழிநடத்திய நீர் இன்னமும் நடத்துவீர் என்ற விசுவாசத்தை எனக்குத் தாரும். ஆமென்.